பொது செய்தி

தமிழ்நாடு

இருளில் மூழ்குகிறது சோழமாதேவி மேடு

Added : நவ 11, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் - கணியூர் ரோட்டில் சோழமாதேவி மேடு உள்ளது. இங்குள்ள நால்ரோடு பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும், ரோட்டின் ஓரம் கடைகளும் உள்ளன. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இங்குள்ள தெருவிளக்குகள் பழுதடைந்து, பலவாரம் ஆனதால், இந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. இதனால், பல விபத்துக்கள் நடக்கிறது.வேடபட்டி ஊராட்சி பகுதியில் அமைந்த தெரு விளக்குகள்காட்சிப்பொருளாக உள்ளன.மக்கள் அடிக்கடி ரோட்டை கடந்து சென்று திரும்பும் தேவை அதிகமுள்ளது. விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரம் வரும் வாகனங்கள்,மக்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள தெருவிளக்குகளின் பழுது நீக்க, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X