இடையூறாக மின்கம்பங்கள்; பொதுக்கழிப்பறை இல்லை தவிப்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி 27வது வார்டு மக்கள்

Added : நவ 11, 2019
Advertisement

தேனி:நடுரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பங்கள், பெண்கள் பொதுக்கழிப்பறை போன்ற பல்வேறு அடிப்படை வசதி குறைபாடால், தேனி அல்லிநகரம் நகராட்சி 27 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.

இந்நகராட்சியின் 27 வது வார்டில் பாரஸ்ட் ரோட்டின் 4, 5, 6 உள்ளிட்ட தெருக்கள் உள்ளன. 4வது குறுக்குத்தெருவில் போக்குவரத்திற்கு இடையூறாக மின்கம்பம் அமைந்துள்ளதால் காலை, மாலை என பள்ளி, கல்லுாரி செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்த தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால், மனித கழிவுகள் கழிவுநீரோடையில் செல்கின்றன. இதனால் நடந்துகூட செல்ல முடியாமல் மக்கள் சுகாதாரக்கேட்டில் தவிக்கின்றனர். பெண்கள் பொதுக்கழிப்பறை கட்ட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மக்கள் கூறுவது என்ன:
சுகாதாரக்கேடு

புகழேந்தி: 4வது தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட வில்லை. அதனால் கழிவு நீரோடையில் சுகாதாரக் கேட்டுடனும், துர்நாற்றத்துடனும் மனித கழிவுகள் செல்கின்றன. இதனால் நோய் தொற்று ஏற்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்புக்களை விரைவாக நகராட்சி அதிகாரிகள் முடிக்க வேண்டும். தெருநாய்கள் தொல்லையால் பெண்கள், சிறுவர்கள்
அச்சப்படுகின்றனர். சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்..

பொதுக்கழிப்பறை

ராசாத்தி: வார்டில் அனைத்துத் தெருக்களில் உள்ள வீடுகளில் கழிப்பறை இல்லாத பெண்கள், ஒதுக்குப்புறத்தில் உள்ள வனத்துறை காடுகளைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதற்காக பயத்தோடு சென்று வருகிறோம். அதனால் உடனடியாக பொதுக் கழிப்பறை இந்த
பகுதிக்கு நகராட்சி சார்பில் கட்டித்தர வேண்டும். பாதாள சாக்கடை இணைப்புப் பணிகளை விரைந்து முடித்து 'பேவர் பிளாக்' கற்களை சீரமைக்க அதிகாரிகள் முன் வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X