பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளின் சிகிச்சைக்கும் வந்தாச்சு... 'அம்மா ஆம்புலன்ஸ்'

Added : நவ 11, 2019
Advertisement
கால்நடைகளின் சிகிச்சைக்கும் வந்தாச்சு...  'அம்மா ஆம்புலன்ஸ்'

உடுமலை:கால்நடைகளுக்கு நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கும், 'அம்மா ஆம்புலன்ஸ்' வாகனம், உடுமலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இனிமேல், '1962' என்ற எண்ணுக்குஅழைத்தால், ஆம்புலன்ஸ் வந்து சேரும்.கால்நடைத்துறை சார்பில், கால்நடைகளுக்கு, விவசாய நிலங்கள், வீடுகளுக்கே நேரில் சென்று சிகிச்சை அளிக்கும், ஆம்புலன்ஸ் சேவை முதல் கட்டமாக, ஐந்து மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது கட்டமாக, 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் கடந்த வாரம் சென்னையில் துவக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கான, 'அம்மா' ஆம்புலன்ஸ், உடுமலைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.உடுமலை பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில், ஏறத்தாழ, 61,390 பசு மாடுகளும், 501 எருதுகளும், 1,799 எருமைகளும், 3,966 நாட்டு மாடுகளும்உள்ளன.மேலும், செம்மறி ஆடுகள், 12,229, வெள்ளாடுகள், 42,566, நாய், 12,884, கோழி, 24 லட்சத்து, 17 ஆயிரத்து, 594, பன்றி, 707 என கால்நடைகள்அதிகளவு உள்ளன.மலைப்பகுதி கிராமங்களிலிருந்து, கால்நடை மருத்துவமனைகளுக்கு கால்நடைகளை அழைத்து வர முடியாமல், கடும் சிரமம் ஏற்படுகிறது. அதோடு, தாராபுரம், பல்லடம் பகுதிகளுக்கு செல்லவும் எளிதாக உள்ளதால், உடுமலைக்கு ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்சில், முழுமையான 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது. கால்நடை நோய்கள் கண்டறியும் அனைத்து நவீன வசதிகளும் உள்ளன. தேவையான மருத்துவ உபகரணங்கள், கருவிகள் உள்ளன.ரத்தம், சிறுநீர் உள்ளிட்டவை மூலம் நோய் கண்டறியும், சிறிய அளவிலான 'லேப்' உள்ளது.தேவையான மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத பகுதியிலிருந்து கால்நடைகளை எடுத்து வரும் வகையில், நவீன தள்ளுவண்டி மற்றும் மேல் சிகிச்சைக்கு கால்நடைகளை கொண்டு வரும் வகையில், ஒரு டன் எடை வரை தாங்கக்கூடிய 'ஹைட்ராலிக் லிப்ட்' வசதி உள்ளது.எந்நேரமும், மின் வசதி இருக்கும் வகையில், 'யு.பி.எஸ்' வசதியும், இரவு நேரங்களில் மின் விளக்கு வசதி இல்லாத பகுதிகளில் சிகிச்சை அளிக்க, ஜெனரேட்டர் மற்றும் அதிக ஒளியுள்ள, நவீன மின் விளக்குகளும் ஆம்புலன்ஸ்சில் பொருத்தப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், 'டிவி' மற்றும் சுற்றிலும் விளம்பரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.அதிகாரிகள் கூறுகையில்,' அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் உடுமலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையான மருந்துகள் இருக்கும். டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். டிரைவர் மற்றும் இரு உதவியாளர் நியமிக்க வேண்டும்.இப்பணிகள் முடிந்து, ஒரு சில நாட்களில், 'அம்மா' ஆம்புலன்ஸ் சேவையை துவக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X