பொது செய்தி

தமிழ்நாடு

ஜம்புலிபுத்தூர் ரோட்டின் வளைவில் 'சென்டர் மீடியன்'

Added : நவ 11, 2019
Advertisement

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி -- பெரியகுளம் ரோட்டில் ஜம்புலிபுத்துார் வளைவுகளில் சென்டர்
மீடியன்' அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வருகிறது.

ஆண்டிபட்டி - பெரியகுளம் ரோட்டில் வைகை அணை, தனியார் சர்க்கரை ஆலை, மற்றும் காபி தயாரிப்பு நிறுவனம் ஆகியவை அமைந்ததால் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து
செல்கிறது. இடையூறு இல்லா போக்குவரத்திற்காக சில ஆண்டுக்கு முன்பு ஆண்டிபட்டி -
பெரியகுளம் ரோடு அகலப்படுத்தப்பட்டது. ஜம்புலிபுத்துாரில் எதிர்வரும் வாகனங்கள்
தெரியாதபடி, இரு வளைவுகள் உள்ளன.

போக்குவரத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு இப்பகுதியில் வளைவான இரு இடங்களில் சென்டர் மீடியன்' அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இதனால் இப்பகுதியை இரவில் கடந்து செல்லும் வாகனங்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள முடியும் என்று நெடுஞ்சாலை துறை ஆண்டிபட்டி கோட்ட உதவி இயக்குனர் திருக்குமரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X