மடத்துக்குளம்:வனப்பகுதியிலிருந்து, குடியிருப்புகளுக்கு மயில்கள் இடம் பெயர்வதை தடுப்பதற்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேற்குத்தொடர்ச்சி மலை, வனப்பகுதியில் வாழும் பறவைகள், போதியளவு உணவு கிடைக்காத காரணத்தால், குடியிருப்புகள் உட்பட பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து, வாழத்தொடங்குகின்றன.அமராவதி வனப்பகுதியில் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் மடத்துக்குளம் பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்கு வந்து செல்கின்றன. கே.டி.எல்.,பகுதியிலுள்ள தனியார் மில், வேடபட்டி, பாப்பான்குளம், கருப்புசாமி புதுார் பகுதியிலுள்ள விளைநிலங்களில், இவை அடிக்கடி உலா வருகின்றன. 'உணவு, குடிநீருக்காக இடம் பெயரும் மயில்கள் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. விளைநிலத்திலுள்ள தானியங்களை உணவாக்கி கொள்கிறது. மயில் நடமாட்டம் கண்ணுக்கு விருந்தளித்தாலும், அவை உணவுக்காக அலைக்கழிவது வருத்தமாக உள்ளது. இதற்கு தீர்வாக வனப்பகுதியில், பறவைகளுக்கான உணவு ஆதாரங்களை பெருக்க வேண்டும்,' என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE