சாதனை விவசாயிகளுக்கு ‛விருது‛ தோட்டக்கலைத் துறை திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை விவசாயிகளுக்கு ‛விருது‛ தோட்டக்கலைத் துறை திட்டம்

Added : நவ 11, 2019
Share
கம்பம்:காய்கறி பயிர்கள், மலர் சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.வேளாண் துறையில் பயிர் மகசூல் போட்டி நடத்தப்படுகிறது. நெல் மகசூல் போட்டி நடைபெறுகிறது. தோட்டக்கலைத்துறையில் போட்டி நடத்த அனுமதி இருந்தபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை

கம்பம்:காய்கறி பயிர்கள், மலர் சாகுபடியில் சாதிக்கும் விவசாயிகளுக்கு விருது வழங்கி
ஊக்குவிக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.

வேளாண் துறையில் பயிர் மகசூல் போட்டி நடத்தப்படுகிறது. நெல் மகசூல் போட்டி
நடைபெறுகிறது. தோட்டக்கலைத்துறையில் போட்டி நடத்த அனுமதி இருந்தபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும்
விவசாயிகளை ஊக்குவிக்க விருது வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தோட்டக்கலைத்துறை முடிவுசெய்துள்ளது.

இதன்படி அதிக பரப்பில் சாகுபடி, நவீன தொழில்நுட்பம் பின்பற்றுவது, அதிக மகசூல் எடுப்பது, இயற்கை முறை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விருது வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலை இயக்குநரகம்விரைவில் விருது வழங்கும் திட்டத்தை
அறிவிக்க உள்ளது. இந்த விருது வட்டாரம், மாவட்டம், மாநில அளவில்வழங்கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X