வட்டார கல்வித்துறைக்கு கட்டடம் சரியில்லை: பாதுகாப்பில்லாததால் பணியாளர்கள் கவலை

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், இடநெருக்கடியோடும், பாதுகாப்பில்லாமலும் இருக்கும், உடுமலை வட்டார கல்வி அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை வட்டார கல்வி அலுவலகம், ஐஸ்வர்யா நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் வட்டார வள மைய கட்டடத்தில், இந்த அலுவலகமும் அமைந்துள்ளது. ஆசிரியர் பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் இங்கு பணிசெய்கின்றனர். வட்டார அளவில் கல்வித்துறை பணிகள் தொடர்பான கோப்புகள், இந்த அலுவலகத்தில்தான் பராமரிக்கப்படுகிறது.வட்டார கல்வி அலுவலகத்தில் மட்டுமே, ஐந்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் இரண்டு அலுவலர்கள் உள்ளனர். குறுகிய அறையில், பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் அறை நிரம்ப அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளால், இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.கோப்புகளை வைக்க இடமில்லாமல், அலுவலர்களின் இடங்களை அவை நிரப்பிக்கொண்டும் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கான கூட்டங்களை இங்கு நடத்த முடியாமல், பள்ளிகளில் நடத்துகின்றனர். மேலும், அலுவலரைக் காண, ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வரும் நாட்களில், அவர்கள், அலுவலகத்துக்கு வெளியே நின்றே காத்திருக்க வேண்டும். தவிர, கட்டடத்தை சுற்றிலும் புதர் செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அலுவலகத்துக்கு பாதுகாப்பாய் இருந்த சுற்றுச்சுவர், இடிந்து மூன்றாண்டுகளை கடந்து விட்டது. எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் அலுவலகம் உள்ளது. இரவு நேரங்களில், கட்டடத்தின் அருகில் அமர்ந்து 'குடி'மகன்கள் அட்டாகாசம் செய்வதாகவும் அப்பகுதியில் புகார் கூறியுள்ளனர்.கல்வித்துறை மூன்றாண்டுகளாகியும் இப்பிரச்னையை கண்டுகொள்ளாமல் இருப்பதால், ஆசிரியர்களும் அதிருப்தியில் உள்ளனர். வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'சுற்றுச்சுவர் கட்டி தருவதற்கும், அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளவும், கல்வித்துறையில் அனுமதி கேட்டிருக்கிறோம். வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளவதற்கான அறிவிப்பு வரும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X