பாதாள சாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறியது

Added : நவ 11, 2019
Advertisement

பெரியகுளம்:பெரியகுளம் வடகரை மில்லர்ரோட்டில் பாதாளசாக்கடை மூடி உடைந்து கழிவுநீர் வெளியேறி அப் பகுதியில் தேங்கியுள்ளது.

பெரியகுளம் நகராட்சி 13 வது வார்டு மில்லர்ரோடு,தென்கரை, வடகரை இணைப்பாக பயன்படும் முக்கிய ரோடாகும். மில்லர் ரோடு பகுதியில் பாதாளசாக்கடை இணைப்பு மூடி உடைந்து
அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி வந்தது.இதனால் அந்தப்பகுதியில் 400 மீட்டர் துாரத்திற்கு
கழிவுநீர் ரோட்டை சூழ்ந்தது. துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால் நுாற்றுக்கணக்கான குடியிருப்பாளர்கள் வீட்டின் கதவை பூட்டி உள்ளேயே முடங்கும்
அவலநிலைஏற்பட்டது.

நேற்று திருமணமுகூர்த்தம் என்பதால் பலரும் இந்தப்பகுதியை புறக்கணித்து, புதுப்பாலம்
மற்றும் சவுராஷ்டிரா சத்திரம் வழியாக சென்றனர். கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளது. தற்போது காய்ச்சல் பரவலாக பரவி வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X