சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைகளால் தொடர் சேதம்: பொதுமக்கள் மறியல் முயற்சி

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:வன எல்லை கிராமங்களில், சுற்றி வரும் யானையை வனத்திற்குள் அனுப்பவும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், தேவனுார்புதுாரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை மற்றும் பொள்ளாச்சி வனச்சரக எல்லையில், தேவனுார்புதுார், ராவனாபுரம் பகுதிகளில், யானைகளால் தொடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.வனப்பகுதியை ஒட்டியுள்ள, விவசாய நிலங்களில் புகுந்து, தென்னை, வாழை, சோளம் என பயிர்களை உண்டு வருவதோடு, தோட்டத்துச்சாளைகளை உடைத்து, உப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களையும் உண்டு வருகிறது. யானைகள், பொதுமக்களையும் தாக்கி வருவதால், அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், நேற்று, மாவடப்பு, குழிப்பட்டி, நல்லாறு காலனி மலைவாழ் மக்கள் மற்றும் வன எல்லையோரம் உள்ள விவசாயிகள், தேவனுார் புதுாரில், ரோடு மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு தளி போலீசார் மற்றும் உடுமலை வனத்துறை அதிகாரிகள் வந்து, பேச்சு நடத்தினர். வனத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும், யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X