காலிப்பணியிடங்களால் ஊராட்சிகளில் திணறல்

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:காலிப்பணியிடங்களால், கூடுதல் பொறுப்பை கவனித்து வரும் ஊராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி தேர்தல் பணிகளும் சேர்ந்துள்ளதால், பணிகளை முடிக்க திணறி வருகின்றனர்.திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளில், செயலாளர் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு கடந்தாண்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில் கல்லாபுரம், குறிஞ்சேரி, ரெட்டிபாளையம், வடபூதிநத்தம், தீபாலபட்டி, ஜிலோபநாயக்கன்பாளையம், குறிச்சிக்கோட்டை, ஆர்.வேலுார் உள்ளிட்ட 8 மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளுக்கான நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.ஊரக வளர்ச்சித்துறையின் கீழ், கிராம ஊராட்சிகளின் பணிகளை, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடுத்தபடியாக செயலாளர்கள் மேற்கொள்கின்றனர். காலிப்பணியிடங்களால், கூடுதல் ஊராட்சிகளுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் பணிச்சுமையால், பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். பலமுறை கோரிக்கைக்கு பின்னர், கடந்தாண்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணலும் நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்தந்த ஒன்றியங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, மாவட்ட நிர்வாகத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்டது. பின்னர், அடுத்தகட்டமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காலிப்பணியிடங்களோடு பணிகள் மட்டுமின்றி, தேர்தல் பணிகளையும் சேர்த்து கவனிக்க வேண்டிய சுமைக்கு, செயலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில்,'கடந்தாண்டு சான்றிதழ் சரிபார்ப்பு வரை நடத்தப்பட்டதால், கட்டாயம் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், மீண்டும் துவங்கிய இடத்தில்தான் அதற்கான நடவடிக்கைகள் நிற்கிறது. காலிப்பணியிடங்கள் இருக்கும் கூடுதல் ஊராட்சிகளின் அன்றாடப்பணிகள், ஊராட்சிகளின் கட்டமைப்பு மேம்படுத்துதல், அடிப்படை பிரச்னைகள் என ஏற்கனவே திணறி வரும் எங்களுக்கு தற்போது, உள்ளாட்சி தேர்தல் பணியும் சவாலாகவே இருக்கப் போகிறது. இதனால், பலரும் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X