பொது செய்தி

தமிழ்நாடு

நால்ரோட்டில் ரவுண்டானா விரைவில் அமைக்கப்படுமா? பெதப்பம்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:நான்கு ரோடு சந்திப்பில், நெரிசலை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் உடுமலை-செஞ்சேரிமலை ரோடு சந்திக்கும், நான்கு ரோடு சந்திப்பு, பெதப்பம்பட்டியில் உள்ளது.இப்பகுதியில், போக்குவரத்து நெரிசலை குறைக்க, நெடுஞ்சாலைத்துறை சாார்பில், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநில நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட துாரத்துக்கு, சென்டர் மீடியனும் அமைக்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு, உடுமலை ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக, உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இதனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டும், நெரிசல் குறையவில்லை. இந்நிலையில், உயர் மின் கோபுரத்திலுள்ள, விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. நெரிசலும் நிரந்தரமாக உள்ளது.வாகன ஓட்டிகள் கூறுகையில், 'பெதப்பம்பட்டி நால்ரோட்டில், நெரிசலை குறைக்க, உயர் மின் கோபுர விளக்கை மாற்றியமைக்க வேண்டும். சந்திப்பின் மையப்பகுதிக்கு, கோபுரத்தை இடம் மாற்றுவதால், அப்பகுதி ரவுண்டானா போல, மாறி விடும். தாராபுரம் மற்றும் உடுமலை ரோட்டுக்கு செல்லும், வாகனங்கள் எளிதாக விலகி செல்ல முடியும். பொள்ளாச்சி, தாராபுரம் பஸ்கள் நிற்பதற்கான இடவசதியும் கிடைக்கும். மேலும், நால்ரோட்டில் நிழற்கூரை வசதியும் இல்லை. வெயில், மழைக்காலத்தில், பயணிகள் அவதிப்பட்டும், சிலரின் ஆதாயத்துக்காக நிழற்கூரை அமைக்காமல், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X