பொது செய்தி

தமிழ்நாடு

நிலையான விலையால் தக்காளி நடவுக்கு ஆர்வம்: பருவமழைக்கு பிறகு சாகுபடி பரப்பு அதிகரிப்பு

Added : நவ 11, 2019
Advertisement
 நிலையான விலையால் தக்காளி நடவுக்கு ஆர்வம்: பருவமழைக்கு பிறகு சாகுபடி பரப்பு அதிகரிப்பு

உடுமலை:உடுமலையில், தக்காளிக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், பருவமழை சீசனில், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.உடுமலை பகுதிகளில், காய்கறி பயிர் சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், குறுகிய கால பயிர், தொடர் வருவாய் என்ற அடிப்படையில், தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில், சராசரியாக, 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.இப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு, ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கிருந்து, வியாபாரிகள் கொள்முதல் செய்து, பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். சீசன் காலத்தில், 14 கிலோ கொண்ட, 70 ஆயிரம் பெட்டிகள் வரை வரத்து காணப்படுகிறது.தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு, போர்வெல்களில் நீர் மட்டம் உயர்ந்தள்ளது. அதோடு, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு, அமராவதி புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு காரணமாக, பாசன நிலங்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், தக்காளிக்கான விலையும், பெட்டி ஒன்றுக்கு, 150 முதல் 350 ரூபாய் வரை விற்று வருவதால், சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. தனியார் நாற்றுப்பண்ணைகளிலும், அதிகளவு தக்காளி நாற்றுக்களே விற்பனையாகிறது.நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் கூறுகையில்,' பருவ மழை நல்ல முறையில் பெய்து வருவதோடு, தக்காளிக்கும் ஓரளவு விலை கிடைத்து வருவதால், தக்காளி சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. மேலும், குறைந்த காலத்தில், தொடர் வருவாய் கிடைப்பதாலும், விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். உடுமலை பகுதிகளில், வழக்கத்தை விட, நடப்பு பருவத்தில் தக்காளி நடவு அதிகரித்துள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X