நகருக்குள் அதிவேகமாக செல்லும்வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

Added : நவ 11, 2019
Advertisement

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் நகருக்குள் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

ஒட்டன்சத்திரம் வழியாக மதுரை, திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து கோவை, பழநி, திருப்பூர் செல்லும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆன்மிக தலமான பழநிக்கு செல்லும் வாகனங்களும், துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களும் அதிகமாக செல்கின்றன.

இதனால் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி ரோட்டில் வாகன போக்குவரத்து குறையாமல் இருக்கும். நகரின் வெளியே இயங்கும் அதே வேகத்திலேயே நகரின் உள்ளே நுழையும்போதும் இயக்கப்படுகின்றன. இதனால் அடிக்கடி நகருக்குள் விபத்தை சந்திக்கின்றன.சில நாட்களுக்கு முன்பு பஸ்ஸ்டாண்ட் முன்பு ரோட்டை கடக்க முயன்ற முதியவர், வேகமாக வந்த லாரியில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார். செக்போஸ்ட் அருகே தனியார் பஸ் மோதி ஒருவர் காயம் அடைந்தார். எனவே நகருக்குள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X