பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலை மாற்றிட திட்டத்தில் மீண்டும் ஆய்வு: விடுபட்டவர்களை சேர்க்க ஆயத்தம்

Added : நவ 11, 2019
Advertisement

கூடலுார்:முதுமலையில், மாற்றிட திட்டத்தில் விடுபட்டவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க, அதிகாரிகள் மீண்டும் ஆய்வு பணியை துவக்கியுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், முதுமலை ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள், மாற்றிய திட்டத்தின் கீழ், மூன்று கட்டங்களாக வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. அவர்களுக்கு அரசு சார்பில், மாற்றிடம் அல்லது 'கோல்டன் ஷேக்' திட்டம் மூலம், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இதன் முதற்கட்டமாக, 200 குடும்பங்களும், 2ம் கட்டமாக, 255 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டனர்.தற்போது மூன்றாவது கட்டமாக, 211 குடும்பங்களை வெளியேற்றும் பணி துவங்கியது.இந்நிலையில், முதுகுழி கிராமத்தில் கடந்த, 6ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில், முதல் இரு கட்டங்களில், விடுபட்டவர்களுக்கு திட்டத்தின் பயன்களை வழங்க வலியுறுத்தினர். இதில் பங்கேற்ற வனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக, மீண்டும் ஆய்வு நடத்த, உறுதி அளித்தனர்.இதன்படி கூடலுார் தாசில்தார் சங்கீதாராணி தலைமையில், முதுமலை வனச்சரகர் தயானந்தன், வருவாய் ஆய்வாளர் சாந்தி, வி.எ.ஓ., மோகன்ராஜ் ஆகியோர் அப்பகுதிகளில் விடுபட்டவர்கள் குறித்த ஆய்வு பணியை, நேற்று முன்தினம் துவக்கினர்.வருவாய் துறையினர் கூறுகையில், 'அப்பகுதிகள், பல்வேறு காரணங்களால் நிலுவையில் உள்ள பயனாளிகள், புதிய விண்ணப்பங்கள் அடிப்படையில், ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்,' என, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X