தும்மனட்டி - -பேரார் சாலை நடந்து செல்லவே சிரமம்

Added : நவ 11, 2019
Advertisement

கோத்தகிரி:ஊட்டி தும்மனட்டி -- பேரார் சாலையை சீரமைக்காததால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி -- பேரார் இடையே, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், தார் சாலை அமைக்கப்பட்டது.இந்த சாலையை முறையாக பராமரிக்காததால், தும்மனட்டி சாலையில் இருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ள பேரார் ஜங்ஷன் வரை, பல இடங்களில் சாலையில் பெரிய அளவில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இச்சாலையை பயன்படுத்த முடியாததால், தொட்டபெட்டா அல்லது கட்டபெட்டு வழியாக, 10 கி.மீ., தொலைவிற்கு சுற்றி வர வேண்டிய நிலை இப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால், தேயிலை தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலை உட்பட இடுபொருட்களை, நீண்டதுாரம் தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையில், சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளன. மக்கள் நடந்து செல்லவே முடியாத நிலையில் சாலை உள்ளது. எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X