பசுந்தேயிலை விலை வீழ்ச்சி: சமாளிக்க ஊடுபயிராக வாழை

Added : நவ 11, 2019
Share
Advertisement
 பசுந்தேயிலை விலை வீழ்ச்சி: சமாளிக்க ஊடுபயிராக வாழை

கூடலுார்:கூடலுார் பகுதியில், பசுந்தேயிலை விலை வீழ்ச்சியை சமாளிக்க, தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வாழை நடவு செய்ய துவங்கியுள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில், முக்கிய விவசாய பயிரான பசுந்தேயிலைக்கு, நிரந்தர விலை கிடைக்காததால், விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.கூடலுார் பகுதியில், தேயிலை தோட்டங்களில் குறுமிளகு, பாக்கு நடவு செய்து ஓரளவு சமாளித்து வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் வருவாயை எதிர்பார்த்து, தேயிலை தோட்டங்களில் வாழை பயிரிட துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'பசுந்தேயிலைக்கு நிரந்தர விளைச்சல் இல்லாததால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய், பராமரிப்பு மற்றும் தொழிலாளர்கள் சம்பளத்திற்குச் சரியாக உள்ளது. இதனால், போதிய வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகிறோம். இதனை சமாளிக்கவே, தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ளோம். மேலும், கோடை காலத்தில் அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகளும் பயிரிடுவோம். இதே நிலை தொடர்ந்தால் தேயிலை செடிகள் அகற்றப்பட்டு, மாற்று விவசாயம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X