பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளை ஆக்கிரமித்தால் நடவடிக்கை பொதுப்பணித்துறை எச்சரிக்கை

Added : நவ 11, 2019
Advertisement

விழுப்புரம்:ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கின்றனர்.
விழுப்புரம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 620 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகள் தற்போது ஆக்கிரமிப்புகளில் சிக்கி, விவசாய சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, விழுப்புரம் பகுதியில் 100 ஏரிகள் அளவீடு செய்யும் பணி முடிந்துள்ளது. இந்த ஏரிகளில் எல்லை கற்கள் பதித்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. மீண்டும் ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யாமல் தடுக்க பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கும் பணி நடந்து வருகிறது.அதில், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பலகைகள் தொடர்ந்து, அனைத்து ஏரிகளிலும் வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X