பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் 'நொறுக்குத்தீனி' விற்க தடை

Added : நவ 11, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் பள்ளி கேன்டீன்களில் நொறுக்கு தீனிகள் விற்கவோ, விளம்பரம் செய்யவோ கூடாது என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக கொழுப்புகள், காரம், உப்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்க கூடியது. குழந்தைகள், மாணவர்களிடம் நொறுக்கு தீனி உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சிறு வயதிலேயே உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள பள்ளி கேன்டீன்களில் நொறுக்குத்தீனி விற்க மற்றும் அது தொடர்பாக விளம்பர பதாகைகள் வைக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கேன்டீன் மட்டுமின்றி, பள்ளிகளைச் சுற்றி 50 மீ., சுற்றளவில் உள்ள கடைகளுக்கும் இந்த தடை பொருந்தும். மாணவர்களின் உடல் நலனை பேணும் வகையில் அனைத்து பள்ளிகளும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.பள்ளி நிர்வாகம் மூலம் தனிக்குழு அமைத்து மாணவர்கள் எம்மாதிரி உணவை வாங்கி உண்ணுகிறார்கள்? அது தரமானதா ? என்று ஆய்வு செய்ய வேண்டும். கேன்டீனில் என்ன உணவு பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை பள்ளி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நொறுக்கு தீனி உண்பதால் வரும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நொறுக்குத்தீனி விற்பது ஆய்வில் தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X