தாவிக்குதித்து ஓடி வரும் குரங்குகள்: விபத்தில் சிக்கும் வாகனங்கள்

Added : நவ 11, 2019
Advertisement
 தாவிக்குதித்து ஓடி வரும் குரங்குகள்: விபத்தில் சிக்கும் வாகனங்கள்

கூடலுார்:கூடலுார் இரும்புப் பாலம் அருகே, கோழிக்கோடு சாலையில் முகாமிடும் குரங்குகள், வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கூடலுாரில், குரங்குகள் உணவு தேடிச் சாலை ஓரங்களில் முகாமிடுவது அதிகரித்துள்ளது. சாலையோரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குகள், வாகனங்களைக் கண்டதும் சாலை நடுவே ஓடி வருகின்றன. இவற்றைக் கண்டு சுதாரிக்கும் வாகன ஓட்டிகளால் இவை உயிர் தப்புகின்றன. அதிவிரைவில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. பல குரங்குகள் கை, கால்களை இழந்துள்ளன.தற்போது, கூடலுார் இரும்புப் பாலம் அருகே, கோழிக்கோடு சாலை ஓரங்களில் உணவுக்காக குரங்குகள் முகாமிட்டுள்ளன. இவை, வாகனங்கள் வரும்போது, சாலையை நோக்கி அதிவேகமாக வருகின்றன.இந்த குரங்குகளும் வாகனங்களில் அடிபட்டு உறுப்பும் உயிரும் இழக்கும் முன், அவற்றை பிடித்து அடர் வனத்தில் விட வேண்டும் என, வாகன ஓட்டிகளும், வனவிலங்கு ஆர்வலர்களும், வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'சாலையோரம் முகாமிடும் குரங்குகள், திடீரென சாலையின் மையத்துக்கு தாவிக் குதித்து ஓடி வருவதால், வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கவும்; வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, அவைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X