பொது செய்தி

தமிழ்நாடு

சின்னதச்சூரில் மழைக்கால நோய் விழிப்புணர்வு பேரணி

Added : நவ 11, 2019
Share
Advertisement
 சின்னதச்சூரில் மழைக்கால நோய் விழிப்புணர்வு பேரணி

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி ஒன்றியம் சின்னதச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது.
விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தலைமை ஆசிரியை (பொறுப்பு ) சாந்தி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியை சுகமதி வரவேற்றார்.ஜே.ஆர்.சி., மாவட்ட கன்வீனர் பாபு செல்வதுரை கலந்து கொண்டு மழைக்கால நோய்களான டெங்கு காய்ச்சல், மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், எலிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களிடையே ஏற்படுத்தி நோய் தடுப்பு விதம் குறித்து பேசினார்.தொடர்ந்து, ஜே.ஆர்.சி. மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி கிராம முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோஷங்கள் எழுப்பி,நோய் தடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X