பந்தலுார்:பந்தலுாரில், மீண்டும் கன மழை தீவிரமடைவதால்,பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை, கூடலுார் பந்தலுார் பகுதிகளில் பெய்கிறது. கடந்த ஆக., மாதம் பெய்த மழையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது.அப்போதைய பாதிப்புகள் இதுவரை சரிசெய்யப்படாத நிலையில், தற்போது மீண்டும் மழையின் தீவிரம் அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பிட்ட சில மணி நேரங்கள் பெய்யும் மழை, தீவிரமாக உள்ளதால், மக்களிடையே, இயற்கை பேரிடர் அச்சம் ஏற்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.கடந்த மழையின்போது மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள், 'செல்பி' எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.