பொது செய்தி

தமிழ்நாடு

சமூக பாதுகாப்பு திட்டத்தில்முதியோர் உதவித்தொகை

Added : நவ 11, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது முதியோர், விதவை, ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உதவும் வகையில் மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு ரூ.ஆயிரத்து 500 உதவி தொகை வழங்கப்படும். 60 முதல் 79 வயது வரையுள்ள முதியோருக்கு ரூ.2 ஆயிரம், 80 வயதுக்கு மேல் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இதில் பயன்பெற 55 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், 18 வயதிற்கு மேற்பட்ட விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர் (7 ஆண்டுகள் கணவரோடு வாழாதவர்), திருமணமாகாதவர் (40 வயதிற்கு மேலானவர்கள்), திருநங்கை (21 வயதுக்கு மேல்) தகுதியானவர்கள். விண்ணப்பத்துடன் வருமானம், குடியுரிமை மற்றும் அடையாள சான்றிதழ்,பிறப்பு, வயதுக்கான சான்று நகல், விதவை எனில் கணவரின் இறப்பு சான்றிதழ் நகல், திருநங்கையாக இருந்தால் அரசு டாக்டர் சான்றிதழ் இணைத்து உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X