பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Added : நவ 11, 2019
Advertisement
 டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டிவனம்:வன்னிப்பேர் கிராமத்தில், பள்ளி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வெள்ளக்குளம் வி.சி.டி.எஸ்., தொண்டு நிறுவனம், பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வன்னிப்பேர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.ஊர்வலத்திற்கு, பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வி.சி.டி.எஸ்., செயலர் கவுசல்யா மார்டின் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.பிரம்மதேசம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் அருண்பாண்டியன், பெருமுக்கல் சுகாதார ஆய்வாளர் பிரியதர்ஷினி, ஊராட்சி செயலர் காயத்ரி, வி.சி.டி.எஸ்., ஒருங்கிணைப்பாளர்கள் ஏசுராஜ், பன்னீர்செல்வம், பிரகாஷ், ஆசிரியை சுகந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X