கன்னியாகுமரி முதல் இமயம் மூவர் சைக்கிள் யாத்திரை: யோகா விழிப்புணர்வுக்காக| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி முதல் இமயம் மூவர் சைக்கிள் யாத்திரை: யோகா விழிப்புணர்வுக்காக

Added : நவ 11, 2019
Share
 கன்னியாகுமரி முதல் இமயம்  மூவர் சைக்கிள் யாத்திரை: யோகா விழிப்புணர்வுக்காக

வேடசந்துார்:யோகா விழிப்புணர்வுக்காக கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரை மூன்று பேர் சைக்கிள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

வேலுார் மாவட்டம் வேலுாரை சேர்ந்தவர் அஜய் மணிராஜ். இவர் கோவை ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சி முடித்துள்ளார். அவருடன் ஐரோப்பாவின் நார்வே நாட்டை சேர்ந்த சவாங்கோ 35, அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி 27, ஆகியோரும் யோகா பயிற்சி பெற்றுள்ளனர். அதன் பிறகு தங்களது நாடுகளில் சவாங்கோ ஆசிரியராகவும், ஆண்ணி சைக்காலஜி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் மூவரும் இணைந்து, 'ஈஷா அட்டையோ' என்ற அமைப்பை உருவாக்கி, பொது மக்களிடம் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் ஒருபகுதியாக 3 பேரும் கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை சைக்கிள் யாத்திரை மேற்கொண்டு உள்ளனர்.வழியில் உள்ள பள்ளி, கல்லுாரி மற்றும் பொதுமக்களிடையே யோகா விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர். நேற்று மாலை வேடசந்துார் வழியாக பயணத்தைத் தொடர்ந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X