கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி தோட்டக்கலைத் துறை சார்பில் மானிய விலையில் வீரிய ரக காய்கறி விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் வாமலை செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி தோட்டக்கலைத் துறைக்கு 158 ஹெக்டர் காய்கறி சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது மானிய விலையில் வெண்டை, வெங்காயம், புடலை, பாகல், பீர்க்கன், கத்திரி உள்ளிட்ட காய்கறி விதைகள் 10 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் மூலம் காய்கறி விதைகள் வாங்கி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 5,000 ரூபாய் மதிப்பில் உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படும்.
மேலும் சாகுபடி செலவுக்காக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து தங்கள் பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE