பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரை ரயில்வே ஸ்டேஷன்நடைமேடை நீளம் அதிகரிப்பு

Added : நவ 11, 2019
Advertisement
 வடமதுரை ரயில்வே ஸ்டேஷன்நடைமேடை நீளம் அதிகரிப்பு

வடமதுரை:வடமதுரை ரயில் நிலையத்தில் முதல் பாதையில் இருக்கும் நடைமேடையின் நீளத்தை அதிகரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
திண்டுக்கல் - திருச்சி இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் ஊர்கள் தவிர, மற்ற ஸ்டேஷன்களில் நடைமேடை நீளம் 12 ரயில் பெட்டிகள் நிற்குமளவுக்கே இருந்தது. கடந்தாண்டு நிறைவுற்ற விழுப்புரம்- திண்டுக்கல் இரண்டாவது பாதை பணியில் அனைத்து ஊர்களிலும் 18 ரயில் பெட்டிகள் நிற்குமளவுக்கு நடைமேடை நீட்டிப்பு செய்யப்பட்டது.ரயில்வே துறையை பொறுத்தவரை நடைமேடைகள் குறைந்தபட்சம் 18 பெட்டிகள் நிற்குமளவுக்கு இருக்க வேண்டும்.

திண்டுக்கல் - திருச்சி இடையே 1998-ல் அமைக்கப்பட்ட முதல் பாதையில் உள்ள நடைமேடை கள் 12 பெட்டிகள் நிற்குமளவுக்கே இருந்தன. இதனையும் 18 பெட்டிகள் நிற்குமளவிற்கு நீளமாக மாற்றியமைக்கும் பணி நடக்கிறது. வடமதுரை ரயில் நிலையத்தில் முதல் பாதை நடைமேடை நீடிக்க வேண்டிய பகுதியில் மண் தளம் அமைக்கப்பட்டது. தற்போது மின்விளக்குகள், பாதுகாப்பு வேலி நிறுவி வண்ணம் பூசப்படுகிறது. பேவர் பிளாக் பணி விரைவில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X