பொது செய்தி

தமிழ்நாடு

நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு; நவ.13 வரை நகராட்சி கெடு!

Added : நவ 11, 2019
Advertisement

வால்பாறை:நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று கெடு விதித்தும், வியாபாரிகள் அகற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.வால்பாறை நகரில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை சிலர் ஆக்கிரமித்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் நடுரோட்டில் நடப்பதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வால்பாறை தாலுகா அலுவலகத்தில், கடந்த ஆக.,மாதம் நடந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புக்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தினர்.அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், சாலையோர வியபாரிகள் கடை அமைக்கும் வகையில், நகராட்சி சார்பில், சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது. இதனிடையே கடந்த, 4ம் தேதிக்குள் கடைகளை அகற்ற வேண்டும் என்று, நகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேற்று வரை, கடைகளை சாலையோர வியாபாரிகள் அகற்றவில்லை.நகராட்சி கமிஷனர்(பொ) சரவணபாபுவிடம் கேட்டபோது, பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அத்துமீறி கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்ட காலஅவகாசம் முடிந்த பின்னரும், கடைகளை அகற்றாமல் உள்ளனர். வரும், 12 ம் தேதிக்குள் அவர்களாகவே கடைகளை அகற்றாவிட்டால், 13 ம் தேதி காலை, போலீசார் முன்னிலையில், நகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்துவார்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X