பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடங்களை சுத்தம் செய்து முன்னாள் மாணவர்கள் முன்னுதாரணம்

Added : நவ 11, 2019
Advertisement
 பள்ளி கட்டடங்களை சுத்தம் செய்து முன்னாள் மாணவர்கள் முன்னுதாரணம்

ஆனைமலை:ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அரசு மேல்நிலை பள்ளியில், சிதிலமடைந்த கட்டடங்களை, முன்னாள் மாணவர் பேரவையினர் சுத்தம் செய்து அசத்தினர்.ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர்கள், 300க்கும் மேற்பட்டோர் கடந்த, 4ம் தேதி முன்னாள் மாணவர்கள் பேரவையை துவங்கினர். இவர்கள், பள்ளியில் சிதிலமடைந்து சில ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் கட்டடங்களை சரிசெய்ய திட்டமிட்டனர்.அதன்படி நேற்று, 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போது படிக்கும் மாணவர்கள் இணைந்து, பள்ளியில் காட்சிப்பொருளாக இருந்த கட்டடத்தை புனரமைத்தனர்.பள்ளி வளாகம் முழுவதிலும், புதர், குப்பை அகற்றி சுத்தம் செய்தனர். மேலும், ஓட்டு மேற்கூரையுள்ள கட்டடங்களில், புதிய ஓடுகள் போட திட்டமிட்டுள்ளனர்.பள்ளியின் பின்புறம், புதர் சூழந்த நிலையில் இருந்த விளையாட்டு மைதானத்தை, பொக்லைன் இயந்திரம் மூலம், சுத்தம் செய்து அசத்தினர்.முன்னாள் மாணவர் பேரவையினர் கூறியதாவது:இந்த பள்ளியில், 24 அறைகள் கொண்ட புதிய கட்டடத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு, மூன்று வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இதனால், பழைய கட்டடத்தை சீரமைக்கிறோம்.பயன்படாமல் இருந்த மைதானத்தை, சுத்தம் செய்கிறோம். அரசு பழைய கட்டடத்தை புனரமைக்கவும், புதர் சூழ்ந்த மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X