வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : நவ 11, 2019
Share
 வால்பாறையில் வெளுத்து வாங்கிய மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வால்பாறை:வால்பாறையில், நேற்று காலை முதல் இடைவிடாமல் பெய்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.வால்பாறையில் அக். 17ம் தேதி முதல் வடகிழக்குப்பருவ மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.தென்மேற்கு மற்றும் வடகிழக்குப்பருவ மழையினால், வால்பாறையில் உள்ள பி.ஏ.பி.,அணைகள் அனைத்தும், கடந்த ஆகஸ்டில் நிரம்பின. இந்த ஆண்டில், 160 அடி உயரம் உள்ள சோலையாறு அணை, நான்கு முறை நிரம்பியது.இந்நிலையில், வால்பாறையில் சந்தை நாளான நேற்று, நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் நேற்று காலை முதல், இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் மார்க்கெட் பகுதியில், காய்கறிகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன. கனமழையால் மக்கள் வீட்டை விட்டுவெளியில் செல்ல முடியாமல் தவித்தனர்.சுற்றுலாபயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.வடகிழக்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.27 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு, 441 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்படுகிறது.மழை நிலவரம்வால்பாறையில் நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(விபரம்:மில்லி மீட்டரில்)சோலையாறு - 28, வாலபாறை - 7, மேல்நீராறு -2, கீழ்நீராறு - 26 பொள்ளாச்சி -30. என்ற அளவில் மழை பெய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X