பொது செய்தி

தமிழ்நாடு

படிக்கட்டு பயணம் வேண்டாம் * ரயில்வே போலீசார் எச்சரிக்கை

Added : நவ 11, 2019
Advertisement

திண்டுக்கல்:'ரயிலில் படியில் அமர்ந்து பயணிக்க கூடாது' என, திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு தினமும் 70 க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் இங்கிருந்து ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் பயணிகள் பாதுகாப்பில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 24 மணிநேரமும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். போதுமான விழிப்புணர்வு இல்லாததால் ரயிலில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ரயில்வே போலீசாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை'

பயணிகள் ஓடும் ரயிலில் ஏறவும், இறங்கவும் கூடாது. கதவு அருகில் நின்றோ, படிக்கட்டில் அமர்ந்தோ பயணம் செய்ய கூடாது. அறிமுகம் இல்லாத நபர்கள் தண்ணீர் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்தால், வாங்க கூடாது. பெண்கள் அதிக நகைகள் அணிந்து கொண்டு ஜன்னலோரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ரயில் தண்டவாளத்தை கடப்பதோ, விபத்து அதிகம் நடைபெறும் பகுதி அருகே செல்வதோ கூடாது.

ரயில் முன்பு நின்று 'செல்பி' எடுக்க கூடாது. அலைபேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க கூடாது. கேட் மூடியிருக்கும் போது கடப்பது குற்றம். தண்டவாளத்தில் கற்களை வைப்பதும், ஓடும் ரயிலின் மீது எறிவதும் குற்றம்' என, ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X