பொது செய்தி

தமிழ்நாடு

பொதுத்தேர்வு கைவிட வேண்டும் :ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

Added : நவ 11, 2019
Share
Advertisement

பொள்ளாச்சி:'நடப்பு கல்வியாண்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவினை கல்வித்துறை கைவிட வேண்டும்,' என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சியில் வடக்கு ஒன்றியம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் நடந்தது. வட்டார செயலாளர் சவுந்தரராஜ் தலைமை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நடப்பு கல்வியாண்டில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துகின்ற தமிழக கல்வித்துறையின் முடிவை கைவிட வேண்டும்.உபரிப்பணியிட மாறுதலில், வெவ்வேறு வட்டாரங்களில் இருந்து பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்., மாதத்துக்கான ஊதிய நிலுவையினை, உடனடியாக வழங்கிட வேண்டும்.இந்த கல்வியாண்டுக்கான ஆசிரியர்களின் சரண்டர், டிஏ நிலுவைத்தொகையினை காலதாமதமின்றி பெற்று, வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் தங்கபாசு, மாவட்ட துணைத்தலைவர் சிவராமன், வட்டார பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X