பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : நவ 11, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி நாச்சியார் வித்யாலயம் பள்ளி மற்றும் உயிர்குட்டி காப்ஸ் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் மணி சின்னசாமி, முதல்வர் சகுந்தலாமணி, உயிர்குட்டி காப்ஸ் ஒருங்கிணைப்பாளர் பாலு, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்துஅலுவலர் சிவகுருநாதன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பாஸ்கரன், ஜெயந்தி முன்னிலைவகித்தனர்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகம், மூன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களும் படிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளதாகவும்; கல்வி பாடத்திட்டத்துடன் இணைத்து, மாணவர்களிடையே உயிர் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கற்பிக்கப்பட உள்ளதாக, நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.தலைக்கவசம் மற்றும் 'சீட் பெல்ட்' அணிவதன் முக்கியத்துவம், சாலை விதிகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும், நிகழ்ச்சியில்விளக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X