மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் டிப்பர் லாரி பறிமுதல்

Added : நவ 11, 2019

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே மயூரா நதிக்கரையிலிருந்து மணல் கடத்திய டப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துார் மயூரா நதிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது அங்கே இருந்த கேட்பாரற்று நின்றிருந்த டிப்பர் லாரியில் 3 யூனிட் மணல் ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. உடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X