பொது செய்தி

தமிழ்நாடு

போலி டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது குறித்து தகவல் தரலாம்!

Added : நவ 11, 2019
Advertisement

பொள்ளாச்சி:''பொள்ளாச்சி பகுதியில், போலி டாக்டர்களை கட்டுப்படுத்த, தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்,'' என,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் தெரிவித்தார்.பொள்ளாச்சி நகராட்சி, தெற்கு, வடக்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக டெங்கு, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள், மருத்துவமனையை நாடுகின்றனர்.ஒரு சிலர், சுயமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதும், கடைகளுக்கு சென்று, மாத்திரைகள் கேட்டு வாங்கியும் சாப்பிட்டு காய்ச்சலைஅதிகப்படுத்திக்கொண்டு, அதன் பின், டாக்டர்களை அணுகும் நிலையும் உள்ளது.வைரஸ் காய்ச்சலுக்கு, ஒரு சிலர் லாபம் பார்க்கும் நோக்கில், மருத்துவம் படித்ததாக போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள், இதுபோன்ற சிகிச்சையால், மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நிலை உள்ளதாகவும், சிலர் போலி சான்றிதழ்கள் மற்றும் எவ்வித சான்றிதழ்கள் இல்லாமலும், தவறான முறையில் சிகிச்சை அளிப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு, பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்தது.தொடர் புகார்களின் பேரில், போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சியில், நேற்று முன்தினம் சான்றிதழ்கள் இல்லாமல், சிகிச்சை அளித்த இரண்டு போலி டாக்டர்களை, மருத்துவ குழுவினர் கண்டறிந்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கண்காணிப்புபொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது:போலி டாக்டர்கள் குறித்த தகவல்கள், மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரிடம் எழுத்துப்பூர்வமாக அல்லது தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கலாம்.மழைக்காலத்தில் அதிகமாக வந்துள்ள வைரஸ் காய்ச்சலுக்கு போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், பல நோயாளிகளின் உடல் நிலை மோசமடைந்துள்ளது; நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். அதன் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.சட்டப்படி நடவடிக்கைகோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணா கூறியதாவது: காய்ச்சல் வந்தால், உடனடியாக பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள், போலி டாக்டர்களிடம் ஏமாறாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த, போதிய தடுப்பு நடவடிக்கைகளுடன், மருத்துவமனைகளிலும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போலி டாக்டர்கள் குறித்து தகவல் இருந்தால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கலாம். விசாரணை மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X