சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதல் ஒருவர் பலி

Added : நவ 11, 2019
Advertisement

அவலுார்பேட்டை:பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்தவர், சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டார்.
மேல்மலையனுாரை சேர்ந்த வடிவேல் மகன் சண்முகம், 40; இவர் கடந்த 6 ம் தேதி மாலை சேத்பட்டிலிருந்து மேல்மலையனுார் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.இந்த பைக், எய்யில் ஏரிக்கரை பகுதி வழியாகக வந்த போது, எதிரே சங்கிலிகுப்பத்தை சேர்ந்த ஜான்பாஷா மகன் முபாரக்,19, என்பவர் வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் படுகாயமடைந்த சண்முகம், வேலுார் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல்,நேற்று முன்தினம் மாலை 5;00, மணிக்கு சண்முகம் பரிதாபமாக இறந்தார்.விபத்து குறித்து, அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X