பொது செய்தி

தமிழ்நாடு

பால் உற்பத்தியை அதிகரிக்கும் 'அசோலா' :எளிதாக செய்ய வழிகாட்டுதல்

Added : நவ 11, 2019
Share
Advertisement
உடுமலை;பசுந்தீவன பற்றாக்குறையை தவிர்க்க, அசோலா வளர்ப்பில், கால்நடை வளர்ப்போர் ஈடுபடலாம் என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.பால் உற்பத்தியை அதிகரிப்பதில், பசுந்தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, அசோலா வளர்க்கலாம் என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.அத்துறையினர் கூறியதாவது: அசோலா என்பது பெரணி வகையைச்

உடுமலை;பசுந்தீவன பற்றாக்குறையை தவிர்க்க, அசோலா வளர்ப்பில், கால்நடை வளர்ப்போர் ஈடுபடலாம் என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.பால் உற்பத்தியை அதிகரிப்பதில், பசுந்தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க, அசோலா வளர்க்கலாம் என கால்நடைத்துறை அறிவுறுத்தியுள்ளது.அத்துறையினர் கூறியதாவது: அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரமாகும். அமினோ அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள் போன்றவற்றை அசோலா உள்ளடக்கியுள்ளது. கறவை மாடுகளுக்கு கொடுக்கும்போது, ஏறத்தாழ இரண்டு லிட்டர் வரை கூடுதலாக பால் பெற முடியும். அசோலா உற்பத்தி செய்ய, தேவையான அளவு குழி வெட்டி, அதனுள் கெட்டியான பிளாஸ்டிக் காகிதம், தார்ப்பாயை விரித்துக் கொள்ள வேண்டும். முதலில் அரை அடி உயரத்துக்குச் செம்மண் கலந்த தோட்டத்து மண்ணைப் போட்டு, இரண்டு கைப்பிடி பாறைத்துாள் அல்லது குவாரி மண் துாவ வேண்டும். நாட்டுப் பசுஞ்சாணம், ஒன்று முதல் 2 கிலோ வரை, வேப்பம்புண்ணாக்கு, 50 முதல், 100 கிராம் வரை போட்டு, சுமார் அரை அடி தண்ணீர் இருக்குமாறு விட வேண்டும். தண்ணீர், மண், புண்ணாக்கு ஆகியவற்றைச் சிறிது நேரம் கிளறிவிட வேண்டும். அதன்பின் சுமார், அரை முதல், ஒரு கிலோ வரை அசோலா விதைகளைத் துாவ வேண்டும். பின், 10 முதல் 15 தினங்களில் தொட்டி முழுவதும் அசோலா வளர்ந்துவிடும். கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அசோலா படுக்கைக் குழிகளைத் தயார் செய்துகொள்ளலாம்.தவிர, ஆறு மாதங்களுக்கு இதில் இருந்து, தினமும் அசோலா அறுவடை செய்யலாம். இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X