பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கான திறனறி போட்டிகள் மாவட்ட அளவில் தேர்வாக வாய்ப்பு

Added : நவ 11, 2019
Advertisement

உடுமலை:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான திறனறிப் போட்டிகள் நடந்தது.அரசு பள்ளிகளில், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத் திறனை மேம்படுத்தும் வகையில் கட்டுரை, விவாத மேடை, உள்ளிட்ட திறனறிப் போட்டிகள் நடத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, உடுமலை கல்வி மாவட்ட அளவில் திறனறிப் போட்டிகளில் ஒன்றான விவாத மேடை போட்டி, 'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்தது கிராமமா அல்லது நகரமா,' என்ற தலைப்பில் பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.போட்டிகளை, பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். தமிழாசிரியர் கார்த்திகா போட்டிகளை ஒருங்கிணைத்தார். தொடர்ந்து, கல்வி மாவட்ட அளவில் மாணவர்களுக்கான திறனறி கட்டுரைப் போட்டிகள் இன்று, பள்ளியில் நடக்கிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, 12 மற்றும் 13ம்தேதிகளில் மாவட்ட அளவிலான போட்டி திருப்பூரில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X