கிரிக்கெட் போட்டி முடிவுகள் 

Added : நவ 11, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பிரசித்தி வித்யோதயா நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., மற்றும் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நடந்த காலிறுதி போட்டியில் பிரசித்தி வித்யோதயா பள்ளி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது. லாடனேந்தல் வேலம்மாள் ரெசிடன்ஷியல் பள்ளி 13 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் வெற்றி பெற்றது. கிரிஷ்ராகுல் 3 விக்கெட் எடுத்தார்.மற்றொரு போட்டிகளில் தேனி வேலம்மாள் வித்யாலயா பள்ளி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. அனுப்பானடி வேலம்மாள் வித்யாலயா பள்ளி 14 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களுக்கு வெற்றி பெற்றது.

சுதர்ஷன் 3 விக்கெட் எடுத்தார்.மதுரை ஜெய்ன் வித்யாலயா பள்ளி 15 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். நேஷனல் பப்ளிக் பள்ளி 13.4 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 99 ரன்களில் வெற்றி பெற்றது. கோமலேஸ்வரன் 44, ஸ்ரீ பாலாஜி 41 நாட் அவுட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X