சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடுகளை சேதப்படுத்திய யானைகள் :எஸ்டேட் தொழிலாளர்கள் துரத்தினர்

Added : நவ 11, 2019
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை அருகே தோட்ட அதிகாரிகளின் வீட்டைசேதப்படுத்திய யானைகளை தொழிலாளர்கள் விரட்டினர்.பருவ மழைக்கு பின் வால்பாறையில் வனவளர் செழிப்பாக இருப்பதால், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு, 80 க்கம் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, அக்காமலை, அய்யர்பாடி, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், லோயர்பாரளை,

வால்பாறை:வால்பாறை அருகே தோட்ட அதிகாரிகளின் வீட்டைசேதப்படுத்திய யானைகளை தொழிலாளர்கள் விரட்டினர்.பருவ மழைக்கு பின் வால்பாறையில் வனவளர் செழிப்பாக இருப்பதால், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறைக்கு, 80 க்கம் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக பல்வேறு எஸ்டேட்களில் முகாமிட்டுள்ளன.குறிப்பாக, அக்காமலை, அய்யர்பாடி, குரங்குமுடி, முருகன் எஸ்டேட், லோயர்பாரளை, புதுத்தோட்டம், சின்னக்கல்லார், பன்னிமேடு, நல்லமுடி, தாய்முடி, சோலையாறு உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள கல்லார் எஸ்டேட் பகுதிக்கு நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு குட்டியுடன் வந்த பத்து யானைகள் எஸ்டேட் மேலாளர் பரிதோஷ் என்பவரின் வீட்டின் பின் பகுதியில் நுழைந்த யானைகள், சமையல் அறையில் இருந்த பொருட்களை வெளியே இழுத்துப்போட்டு சேதப்படுத்தியது. அதன் பின் அதே பகுதியில், நான்கு தோட்ட அதிகாரிகளின் வீட்டின் கதவு, ஜன்னல்களை சேதப்படுத்தியது. பின் அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவற்றை ருசித்து உட்கொண்டது. தகவல் அறிந்த எஸ்டேட் தொழிலாளர்கள் டிராக்டர் மூலம் அதிக ஒலி எலுப்பியும், அதி வெளிச்சம் தரும் டார்ச் லைட்களை அடித்தும், பட்டாசு வெடித்தும் விடிய,விடிய யானைகளை விரட்டினர்.யானையை விரட்ட வனத்துறையினர் யாரும் வராததால், தொழிலாளர்களே இரண்டுமணி நேரத்திற்கு மேல் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X