பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை' யில் குவிந்த மாணவர்கள்

Added : நவ 11, 2019
Share
Advertisement
 'கொடை' யில்  குவிந்த மாணவர்கள்

கொடைக்கானல்:கொடைக்கானலில் வார விடுமுறையான நேற்று பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்திருந்தது.

வடகிழக்கு பருவமழை துவங்கியபோது ரெட் அலார்ட் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. வார விடுமுறை தினத்தில் கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் வருகையே இருந்து வந்த நிலையில்,பல்வேறுமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கொடைக்கானலில் குவிந்தனர்.

ஏரியில் படகு சவாரி, கோக்கர்ஸ்வாக் , பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை ரசித்தனர். நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவி ரம்யமான சீதோஷ்ண நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X