பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியாளர்கள் கலந்துரையாடல்

Added : நவ 11, 2019
Share
Advertisement
 கல்வியாளர்கள் கலந்துரையாடல்

திண்டிவனம்:ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளியில்,கல்வியாளர்கள் பங்கேற்ற கலந்துறையாடல் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கம் ஸ்ரீதரம்சந்த் ஜெயின் பள்ளியில், கல்வியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிச்சியில்,உலக அளவில் கல்வி கற்றல், கற்பித்தல் புதுமைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள இலங்கை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.விழாவில், சிறப்பு விருந்தினர்களாக சி.இ.டி. நிறுவன தலைவர் டாக்டர் பிரியதர்ஷினி நாயக், டூன் பப்ளிக் பள்ளி இயக்குநர் டாக்டர் தீரஜ் மேக்ரோத்ரா,இலங்கையை சேர்ந்த தேவக்குமார், மாகான உதவிக்கல்வி பணியாளர் ஜேசுப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில், பள்ளி தாளாளர் பப்ளாசா, செயலாளர் ஜின்ராஜ், பொருளாளர் நவின்குமார், பள்ளி முதல்வர்கள் பாலசந்தர், சாந்தி பாலசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள்மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X