நெடுஞ்சாலையில் பேவர் பிளாக் நடைபாதை: பாதசாரிகள் பாதுகாப்பில் அக்கறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் 'பேவர் பிளாக்' நடைபாதை: பாதசாரிகள் பாதுகாப்பில் அக்கறை

Added : நவ 11, 2019
Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நெடுஞ்சாலையோரம், பாதசாரிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முதன்முதலில், 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்கப்படுகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள ரோடுகளை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.முதற்கட்டமாக, வடக்கிபாளையம் பிரிவு - நடுப்புணி வரையிலான மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தப்படுகிறது.இதில், வடக்கிபாளையம் பிரிவில், கோவை ரோட்டில் இருந்து, ரயில்வே மேம்பாலம் வரையில் ரோட்டின் இரு பக்கமும் 'பேவர் பிளாக்' பதித்து, நடைபாதை அமைக்கப்படுகிறது. அப்பகுதி, குடியிருப்புகள் நிறைந்தது என்பதால், பாதசாரிகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. பாதசாரிகள் பிரதான ரோட்டில் நடந்து செல்லும் போது, வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதால், அதை தவிர்க்க, 'பேவர் பிளாக்' நடைபாதை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.நெடுஞ்சாலைகளில், தேவைப்படும் இடங்களில் இதே போன்ற நடைபாதைகள் அமைக்க இருப்பதாகவும் கூறினர்.பொள்ளாச்சியில், நெடுஞ்சாலையோரத்தில் அமைக்கப்படும் முதல் 'பேவர் பிளாக்' நடைபாதை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X