ஆனைமலை:கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் வரும், 13ம் தேதி, அனைவருக்கும் வீடு திட்டத்தில் பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பிரதமரின் அனைவருக்கும் வீடு (அவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம், மத்திய, மாநில அரசின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்தில், மக்கள் பங்களிப்புடன் வீடு கட்டித்தரப்படுகிறது. திட்டம் மூலம், வீடில்லாத ஏழை மக்கள் தங்கள் சொந்த இடத்தில், வீடு கட்டிக்கொள்ளலாம். ஓட்டு மேற்கூரை அல்லது குடிசைகளில் வசிப்போர், திட்டத்தை பயன்படுத்தி வீடுகள் கட்டலாம்.திட்டத்தின் கீழ் கோட்டூர் பேரூராட்சியில், 2015 - 2016ம் ஆண்டு, 14 வீடுகள், 2016 - 2017ம் ஆண்டு, 188 வீடுகள், 2017 - 2018ம் ஆண்டு, 30 வீடுகள் கட்டித்தரப்பட்டன.நடப்பு ஆண்டு இத்திட்டத்தில் மக்கள் பயனடைய வரும், 13ம் தேதி கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. சிறப்பு முகாமில் பங்கேற்க, மக்களுக்கு பேரூராட்சியினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் கூறுகையில், ''சிறப்பு முகாமில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் விண்ணப்பிக்க, இரண்டு புகைப்படம், பட்டா, வீட்டு வரி ரசீது, வங்கி புத்தக நகல், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல் கொண்டுவர வேண்டும். மக்கள் திட்டத்தை பயன்படுத்த முன்வர வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE