திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ம.தி.மு.க.,மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் ராமசாமி தலைமை வகித்தார். கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், மாவட்ட செயலாளர் செல்வராகவன் சிறப்புரை ஆற்றினர். நகர செயலாளர் செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் மோகன் பங்கேற்றனர். 'உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற ம.தி.மு.க.,வினர் உழைக்க வேண்டும். ம.தி.மு.க., வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மக்களை சந்தித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும். டெங்கு, மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை' என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேறின.