கார் திருட்டு போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் திருட்டு போலீசார் விசாரணை

Added : நவ 11, 2019
Share
செஞ்சி:செஞ்சி அருகே கடை முன் நிறுத்தியிந்த காரை திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சக்திவேல் 28; இவர் ஜே.சி.பி., மற்றும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்து வருகிறார். இவரது கடை மேல்களவாய் கூட் ரோட்டில் உள்ளது.சக்திவேல், நேற்று முன் தினம் இரவு தனது இட்டியாஸ் சொகுசு காரை (எண். TN 16 Y 94 72 ) கடைக்கு

செஞ்சி:செஞ்சி அருகே கடை முன் நிறுத்தியிந்த காரை திருடிச்சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.
செஞ்சி அருகே உள்ள மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சக்திவேல் 28; இவர் ஜே.சி.பி., மற்றும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்து வருகிறார். இவரது கடை மேல்களவாய் கூட் ரோட்டில் உள்ளது.சக்திவேல், நேற்று முன் தினம் இரவு தனது இட்டியாஸ் சொகுசு காரை (எண். TN 16 Y 94 72 ) கடைக்கு அருகில் நிறுத்திவிட்டு, கடையினுள் துாங்கியுள்ளார்.நேற்று அதிகாலை எழுந்து பார்த்தபோது, நிறுத்தி வைத்திருந்த காரை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X