பொது செய்தி

தமிழ்நாடு

கடுவனுார் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 11, 2019
Advertisement
 கடுவனுார் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுாரில் செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுார் ஏரிக்கரையில் அமைந்துள்ள செல்லியம்மனுக்கு கடந்த 9ந்தேதி காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் விக்னேஷ்வரர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், முதற்கால யாக கால பூஜையுடன் பூர்ணாஹூதி தீபாரதனை முடிந்தது.தொடர்ந்து, நேற்று காலை 6.30 மணிக்கு கோபூஜை, யாகசாலை பூஜை ஆரம்பித்து, 9 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாரதனை முடிந்து 9.30 மணிக்கு கடம் புறப்பட்டு 10.30 மணிக்கு செல்லியம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.இதில், பல்வேறு பகுதிகளிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X