பொது செய்தி

தமிழ்நாடு

சி.மெய்யூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Added : நவ 11, 2019
Advertisement
 சி.மெய்யூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி காலை 10:00 மணிக்கு அகல்மஷ ேஹாமம், வாஸ்து சாந்தி, மாலை 5:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணாஹூதி நடந்தது.தொடர்ந்து, 9ம் தேதி அக்னி கும்ப ஆராதனம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல், திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மூர்த்தி ஹோமம் நடந்தது.இதையடுத்து, நேற்று விஸ்வ ரூப தரிசனம், அக்னி கும்ப ஆராதனம், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடந்தது. பின், காலை 10:00 மணியளவில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் மற்றும் சக்கரத்தாழ்வார், அனுமார் கோவில், ஆழ்வார்கள், மணவாள மாமுனிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணகுமார் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X