தமிழ்நாடு

உங்க ஊருக்கே வர்றோம்பா...! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சொல்றாங்க...

Updated : நவ 11, 2019 | Added : நவ 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
உங்க ஊருக்கே வர்றோம்பா...! பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சொல்றாங்க...

திருப்பூர்:வெளிமாவட்டங்களில் பயிற்சி மையம் செயல்படுத்த, திருப்பூரை சேர்ந்த பத்து ஆடை உற்பத்தி நிறுவனங்கள் தயாராக உள்ளன. அந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில், தொழிலாளர் பற்றாக்குறை நீடித்துவருகிறது. தமிழக தொழிலாளர்களை அதிக அளவில் பணி அமர்த்தி, பற்றாக்குறையை போக்க, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, பொதிகை அமைப்புகள் இணைந்து முயற்சி மேற்கொண்டுவருகின்றன. இதற்காக ஒளிவிளக்கு என்கிற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும், 23 மாவட்டங்களில் சர்வே நடத்தி, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிய உகந்த தொழிலாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அருகாமையிலேயே பயிற்சி மையங்கள் அமைத்து, தொழிலாளர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்து, திருப்பூர் நிறுவனங்களில் பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 60 பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளது இதில், மதுரை மாவட்டத்தில் 4; சிவகங்கை, திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில் தலா 3; வேலுார், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம், விருதுநகர், கடலுார் மாவட்டங்களில் தலா 2; புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் தலா ஒன்று வீதம், மொத்தம் 30 பயிற்சி மையங்கள் தயார்நிலையில் உள்ளன.
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவி, உள்ளூர் முதலீட்டாளர்களின் உள்கட்டமைப்பு வசதிகளுடன், இம்மையங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. வெளிமாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களை செயல்படுத்த, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.
முதல்கட்டமாக பத்து ஏற்றுமதி நிறுவனங்கள், பயிற்சி மையங்களை செயல்படுத்த முன்வந்துள்ளன; இதற்காக, பின்னலாடை நிறுவனங்கள், ஒளிவிளக்கு திட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஒளிவிளக்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் 30 பயிற்சி மையங்கள் உடனடியாக செயல்படுத்தும்வகையில், தயார்நிலையில் உள்ளன. தொழிலாளர் தேவை அதிகரித்துவரும்நிலையில், இப்பயிற்சி மையங்களை செயல்படுத்த, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்காட்டுகின்றன. அந்தவகையில், பத்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.
பேச்சுவார்த்தை முடிந்தபின், பயிற்சி மையங்கள் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இம்மையங்களில் பயிற்சி முடிக்கும் தொழிலாளர்கள், திருப்பூர் நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர்.
சுற்றுப்பகுதியினர் அனைவருக்கும் பயிற்சி அளித்தபின், பயிற்சி மையங்கள், குறிப்பிட்ட ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு ஆடை தயாரித்துக்கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனமாக மாற்றப்படும். திருப்பூர் வர விரும்பாத தொழிலாளர்கள், இத்தகைய நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுவர்.இதன்மூலம், வேலை வாய்ப்பு அதிகரிப்பதோடு, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் தொழிலாளர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-நவ-201910:25:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அருமையான திட்டம். வாழ்த்துக்கள். நாமக்கல் மாவட்டத்தில் துவக்க விரும்பினால் நான் இடம் தருகிறேன், vanghipuram @yahoo .com தொடர்பு கொள்ளவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X