பொது செய்தி

தமிழ்நாடு

வெங்காயத்துக்கு பதில் முட்டைக்கோஸ்:ஆம்லெட் ருசிக்கல...

Added : நவ 11, 2019
Advertisement

திருப்பூர்:பதுக்கல் காரணமாக பெரிய வெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்து, கிலோ, 60 ரூபாயை எட்டிபிடித்துள்ளது. விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் வெங்காயம் பயன்படுத்துவது குறைந்துள்ளது. பெரும்பாலான ஓட்டல்களில் வெங்காய சட்னி இல்லை என சர்வர்கள் கூற துவங்கியுள்ளனர்.
ஆம்லேட்களில் வெங்காயத்துக்கு பதில் முட்டைகோஸ் சேர்க்கப்படுகிறது. முட்டை புரோட்டாக்களில் வெங்காயம் சேர்ப்பது குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கம்மங்கூழ், மோர் கடைகளில் இவற்றில் ருசி கூட பெரிய வெங்காயம் சேர்க்கப்படும். தற்போது குறைந்தளவே சேர்க்கப்படுகிறது.
ரோட்டோரங்களில் வெங்காயத்தை குவித்து வைத்து நான்கு கிலோ, 100 ரூபாய் என விற்ற கடைகள் மாயமாகியுள்ளன. வெளிமாநில வெங்காய வரத்து மார்க்கெட்டுக்கு குறைந்ததால், கிராக்கி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ பெரிய வெங்காயம், 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெளிமார்க்கெட்டில் வெங்காயம், 60 ரூபாயாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X