விழுப்புரம், நவ. 11-
விழுப்புரம், வழுதரெட்டி பகுதியை சேர்ந்த முருகன் மகன் சாந்தகுமார், 19; இவர் நேற்று முன்தினம் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இந்த திருமணத்திற்கு, மணமகன் வீட்டு சார்பில், தோகைப்பாடியை சேர்ந்த மூர்த்தி மகன் ஆனந்த்,30; ராஜேந்திரன் மகன் அருள் ஆனந்தன், 28; பூவப்பிள்ளை மகன் பிரபு,26; ஆகியோரும் வந்திருந்தனர்.பெண் வீட்டை சேர்ந்தோர், கூரைப்புடவை படைப்பதற்காக, பாட்டு கச்சேரியை நிறுத்த கூறியுள்ளனர். இதற்கு, மணமகன் வீட்டார் ஏன், நிறுத்த சொன்னீர்கள் என கேட்டு, சாந்தகுமார், ஆனந்த் உட்பட மூவரும் சேர்ந்து திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதையடுத்து, சாந்தகுமாரும், மணமகன் வீட்டை சேர்ந்த அரிகரன்,26; என்பவரை தாக்கியுள்ளார். இரு தரப்பு புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து, ஆனந்த், அருள்ஆனந்தன், பிரபு ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE